Monday, December 29, 2014

தாரை தோஷ நிவர்த்தி


தாரை தோஷ நிவர்த்தி 

உத்தர த்ரய ஹஸ்தேஷு ஸ்வாதி ஸெம்யாநு ராதயோ:
விபத்ப்ரத்யரதோஷஸ்ச வததோஷோ ந வித்யதே!
பொருள்: உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி, ஹஸ்தம், ஸ்வாதி, மிருகசீர்ஷம், அனுஷம் இந்த நக்ஷத்திரங்களுக்கு விபத்தாரை, பிரத்யக் தாரை, வதை தாரை தோஷமில்லை.

தர்மமும் ! அதர்மமும் !



தர்மமும் ! அதர்மமும் !

தர்மம் அதர்மம் இவ்விரண்டும்" நான் தர்மம்", " நான் அதர்மம்" என்று கூறிக்கொண்டு திரிவதில்லை.தேவர்கள், கந்தர்வர்கள், பித்ருக்கள் இவர்களும் கூட இது தர்மம் இது அதர்மம் என்று நேரில் சொருபத்தை காட்டி சொல்ல முடியாது.பெரியவர்கள் எந்த கார்யத்தை புகழ்கிறார்களோ அது தர்மம். எதை இகழ்கிறார்களோ அது அதர்மம் என்று அறிக!

ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்.!


மனிதனுக்கு ஒழுக்கம் இன்றியமையாதது! 

ஒழுக்கத்தை நடைமுறைப்படுத்துபவன் யாராயினும் அவன் மேன்மையுறுவான். உடல்தூய்மை, மனத்தூய்மை, ஆகார நியமம் மற்றும் ப்ரம்மசர்யம் ஆகிய நியமங்களே ஒழுக்கம் எனப்படும். இது எல்லா தர்மங்களுக்கும் அங்கமாகும்.

ஒழுக்கம் இல்லாத தர்மம் பலத்தை கொடுப்பது இல்லை. வேதம் இறைபக்தி இவை ஒழுக்கம் தவறியவனை காப்பாற்றாது! மேலும் புனித தலங்களுக்கு செல்வது புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது ஹோம யாகங்கள் அனுஷ்டிப்பது இவைகளும் ஒழுக்கம் விட்டவனை பாதுகாக்காது.

தானத்தின் பலன்கள்


தானத்தின் பலன்கள்

ஜலத்தை அளிப்பவன் திருப்தியையும்
அன்னத்தை அளிப்பவன் குறைவில்லா சுகத்தையும்
எள்ளு அளிப்பவன் நல்ல சந்ததியையும்
தீபம் கொடுப்பவன் நல்ல கண்ணையும்
பூமியை அளிப்பவன் பூமியையும்
தங்கம் அளிப்பவன் தீர்கமான ஆயுளையும்
வீடு அளிப்பவன் உயர்ந்த மாளிகைகளையும்
வெள்ளி அளிப்பவன் அம்சமான ரூபத்தையும்
வேஷ்டி அளிப்பவன் சந்திர லோகத்தையும்
காளையை அளிப்பவன் அகண்ட ஐஸ்வரீயத்தையும்
வண்டி அளிப்பவன் அழகான பத்தினியையும்
அபய தானம் அளிப்பவன் தனத்தையும்
தான்யம் அளிப்பவன் நிலையான சௌக்கியத்தையும்
வேத தானம் ( ஞானத்தை ) அளிப்பவன் பிரம்மலோகத்தையும் அடைவான்.
எல்லா தானத்தை காட்டிலும் வேததானம் உயர்வானது!
தானத்தை யாருக்கும் செய்யலாம். ஆனால் இடமும் காலமும் பாத்திரமும் அனுசரித்து அளித்தால் பலன் அதிகம்.

இட்டார் பெரியார் !
இடாதார் இழிகுலத்தோர் பட்டாங்கில் உள்ளபடி !

யுக தர்மங்கள் !




யுக தர்மங்கள் !

க்ருதயுகத்தில் தபஸ் விஷேச தர்மமாகும்.
த்ரேதாயுகத்தில் ஞானம் விஷேச தர்மமாகும்.
த்வாபரயுகத்தில் யக்ஞம் விஷேச தர்மமாகும்.
கலியுகத்தில் தானம் விஷேச தர்மமாகும்.

எல்லா யுகத்திலும் நான்கு தர்மங்களும் உண்டு. இருப்பினும் அந்தந்த யுகத்திற்கு அந்தந்த தர்மம் உன்னத பலனை அளிக்கும்.

Saturday, December 27, 2014

நக்ஷ்சத்திரம் - பத அர்த்தம் !

நக்ஷ்சத்திரம்



நக்ஷ்க்ஷேத்திர  என்பதை "நக்ஷ்" என்றும் "க்ஷேத்திரம்" என்றும் இரண்டு சொற்களாக பிரிக்கலாம். "நக்ஷ்" என்றால் "ஆகாயம்" என்றும்  "க்ஷேத்திரம்" என்றால் இடம்" என்றும்  பொருள்படும். எனவே நக்ஷ்க்ஷேத்திர என்றால் ஆகாயத்தில் ஒரு இடம் எனப்பொருள்படும். இதுவே மருவி நக்ஷ்சத்திரம் என்றழைக்கப்படுகிறது.

Saturday, September 13, 2014

மனித ஜீவிதத்தின் ஆயுள் விபரம்





மனித ஜீவிதத்தின் உத்தம மத்திம அற்ப ஆயுள் விபரம்!

1 வயது முதல் 32 வயது வரை அற்பாயுள் !

33 வயது முதல் 60 வயது வரை மத்திமாயுள் !

60 வயது முதல் 120 வயதுவரை உத்ம ஆயுள் அல்லது தீர்க்காயுள்!


இலக்ன நிர்ணயம்


யுகதர்மப்படி இலக்ன நிர்ணயம் !



சத்யயுகத்தில் கர்பதானஞ் செய்ய தீர்மானித்த லக்னமே ஜனன லக்னமாகவும்

திரேதாயுகத்தில் சூல்கொண்ட குறிப்பே ஜனன லக்னமாகவும்

துவாபரயுகத்தில் ஜனனத்தின் தோற்றமே ஜனன லக்னமாகவும்

கலியுகத்தில் குழந்தை பூபகமானதே ஜனன லக்னமாக கொள்ளுதல் முறைமையாம்!






~ சுந்தரசேகரம்

Friday, August 15, 2014

இறைவனின் கருணை




இறைவனின் கருணை!

ஆணவ இருளில் முழ்கி இருக்கும் உயிர்களின் பால் இரக்கம் கொண்ட இறைவன் அவைகளை மீட்கும் பொருட்டு  தனது அன்பால் தனு  கரண போக புவனங்களை படைத்து அவற்றிக்கு அளித்தான். தனு என்பது எழுவகைத் தோற்றம் அவை முறையே ஊர்வன, நீர்வாழ்வன, தாவரங்கள், பறவை இனம், விலங்கினம், மனிதன், தேவர்-- எனவாம். ஒவ்வொன்றிக்கும் உரிய கரணங்களையும் அதற்குரிய உலகங்களையும் இன்பங்களையும் படைதளித்தான். உயிர் அறிவு நிலைகளில் படிப்படியாக முன்னேறி ஆறறிவு பெற்ற மனித உருவத்தை பெறுகிறது. ஆறறிவு பெற்ற மனிதனே தன்னை அறியும் பேறு பெறுகிறான். பிறவியின் நோக்கம் தன்னை அறிவதே! அவனே தனது உண்மையை பற்றியும் இறைவனின் கருணை பற்றியும் உணரதக்கவன்.

மனித பிறவி பெற்றும் ஆணவ கன்ம மாயையின் மயக்கத்தால் மனிதன் தன்  உண்மை நிலையை அறிவதில்லை! தன உண்மை நிலையை அறியும் வரை பல்வேறு பிறவிகளை பெற்று செய்த பாவ புண்ணிய பலன்களை அனுபவிக்கின்றான். இறைவனின் நியதியில் தோற்றத்தை பெறும் அனைத்தும் காலத்தின் எல்லையை அடைகின்றது. காலத்தின் பரிபாலனம் நவகிரகங்களின் வழியே செயல்படுகிறது.

Friday, February 21, 2014

கற்பனை எல்லையை கடந்த பிரபஞ்சம்!

கற்பனை எல்லையை கடந்த பிரபஞ்சம்!



நாம் வாழும் இந்த பூமி சூரிய குடும்பத்தின் ஓர் அங்கம். சூரியன் நட்சத்திர கூட்டத்தில் ஒன்று. நட்சத்திர கூட்டங்கள் பால்வெளியின் ஓர் அங்கம். பால்வெளியும் வெளிவெடிப்பில் தோன்றிய பல்வேறு வெளிகூட்டங்களில் ஒன்று......... இந்த கற்பனையை இந்த காணொளியில் கண்டு களியுங்கள்.
Related Posts Plugin for WordPress, Blogger...