இறைவனின் கருணை!
ஆணவ இருளில் முழ்கி இருக்கும் உயிர்களின் பால் இரக்கம் கொண்ட இறைவன் அவைகளை மீட்கும் பொருட்டு தனது அன்பால் தனு கரண போக புவனங்களை படைத்து அவற்றிக்கு அளித்தான். தனு என்பது எழுவகைத் தோற்றம் அவை முறையே ஊர்வன, நீர்வாழ்வன, தாவரங்கள், பறவை இனம், விலங்கினம், மனிதன், தேவர்-- எனவாம். ஒவ்வொன்றிக்கும் உரிய கரணங்களையும் அதற்குரிய உலகங்களையும் இன்பங்களையும் படைதளித்தான். உயிர் அறிவு நிலைகளில் படிப்படியாக முன்னேறி ஆறறிவு பெற்ற மனித உருவத்தை பெறுகிறது. ஆறறிவு பெற்ற மனிதனே தன்னை அறியும் பேறு பெறுகிறான். பிறவியின் நோக்கம் தன்னை அறிவதே! அவனே தனது உண்மையை பற்றியும் இறைவனின் கருணை பற்றியும் உணரதக்கவன்.
மனித பிறவி பெற்றும் ஆணவ கன்ம மாயையின் மயக்கத்தால் மனிதன் தன் உண்மை நிலையை அறிவதில்லை! தன உண்மை நிலையை அறியும் வரை பல்வேறு பிறவிகளை பெற்று செய்த பாவ புண்ணிய பலன்களை அனுபவிக்கின்றான். இறைவனின் நியதியில் தோற்றத்தை பெறும் அனைத்தும் காலத்தின் எல்லையை அடைகின்றது. காலத்தின் பரிபாலனம் நவகிரகங்களின் வழியே செயல்படுகிறது.