பரம்பொருள் ஜோதி வடிவானது. ஜோதி எல்லையற்ற தன்மையுடையது! எல்லாவற்றிலும் ஊடுருவி நிற்பது. அது எல்லைக்குட்பட்டு பிரகாசிக்கும் நிலையில் நட்சத்திரமாகவும் சூரியனாகவும் சந்திரனாகவும் ஆத்மாகவும் உள்ளது! இவை ஒவ்வொன்றும் காலச் சக்கரத்தில் பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளன! இவற்றின் தொர்புகளை பற்றிய கணிதமும் அறிவும் கடலை (சாகரம்) போன்று விசாலமானது.அடியேனின் சிற்றறிவை கொண்டு ஜோதிடத்தை விளக்க முயலும் முயற்சியானது கடலை கையால் அளப்பதற்கு ஒப்பாகும். இப்பணியை எல்லாம் வல்ல பரம்பொருளை நினைந்து துவங்குகிறேன்.
Monday, December 29, 2014
தர்மமும் ! அதர்மமும் !
தர்மமும் ! அதர்மமும் !
தர்மம் அதர்மம் இவ்விரண்டும்" நான் தர்மம்", " நான் அதர்மம்" என்று கூறிக்கொண்டு திரிவதில்லை.தேவர்கள், கந்தர்வர்கள், பித்ருக்கள் இவர்களும் கூட இது தர்மம் இது அதர்மம் என்று நேரில் சொருபத்தை காட்டி சொல்ல முடியாது.பெரியவர்கள் எந்த கார்யத்தை புகழ்கிறார்களோ அது தர்மம். எதை இகழ்கிறார்களோ அது அதர்மம் என்று அறிக!
ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்.!
மனிதனுக்கு ஒழுக்கம் இன்றியமையாதது!
ஒழுக்கத்தை நடைமுறைப்படுத்துபவன் யாராயினும் அவன் மேன்மையுறுவான். உடல்தூய்மை, மனத்தூய்மை, ஆகார நியமம் மற்றும் ப்ரம்மசர்யம் ஆகிய நியமங்களே ஒழுக்கம் எனப்படும். இது எல்லா தர்மங்களுக்கும் அங்கமாகும்.
ஒழுக்கம் இல்லாத தர்மம் பலத்தை கொடுப்பது இல்லை. வேதம் இறைபக்தி இவை ஒழுக்கம் தவறியவனை காப்பாற்றாது! மேலும் புனித தலங்களுக்கு செல்வது புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது ஹோம யாகங்கள் அனுஷ்டிப்பது இவைகளும் ஒழுக்கம் விட்டவனை பாதுகாக்காது.
தானத்தின் பலன்கள்
தானத்தின் பலன்கள்
ஜலத்தை அளிப்பவன் திருப்தியையும்
அன்னத்தை அளிப்பவன் குறைவில்லா சுகத்தையும்
எள்ளு அளிப்பவன் நல்ல சந்ததியையும்
தீபம் கொடுப்பவன் நல்ல கண்ணையும்
பூமியை அளிப்பவன் பூமியையும்
தங்கம் அளிப்பவன் தீர்கமான ஆயுளையும்
வீடு அளிப்பவன் உயர்ந்த மாளிகைகளையும்
வெள்ளி அளிப்பவன் அம்சமான ரூபத்தையும்
வேஷ்டி அளிப்பவன் சந்திர லோகத்தையும்
காளையை அளிப்பவன் அகண்ட ஐஸ்வரீயத்தையும்
வண்டி அளிப்பவன் அழகான பத்தினியையும்
அபய தானம் அளிப்பவன் தனத்தையும்
தான்யம் அளிப்பவன் நிலையான சௌக்கியத்தையும்
வேத தானம் ( ஞானத்தை ) அளிப்பவன் பிரம்மலோகத்தையும் அடைவான்.
எல்லா தானத்தை காட்டிலும் வேததானம் உயர்வானது!
தானத்தை யாருக்கும் செய்யலாம். ஆனால் இடமும் காலமும் பாத்திரமும் அனுசரித்து அளித்தால் பலன் அதிகம்.
இட்டார் பெரியார் !
இடாதார் இழிகுலத்தோர் பட்டாங்கில் உள்ளபடி !
Saturday, December 27, 2014
Subscribe to:
Posts (Atom)