Tuesday, July 30, 2013

வார நாட்களின் பெயர் காரணங்கள்!



பைபிள் (ஆதியாகமம் ) மற்றும் திருகுரான் (கசசுல் அன்பியா ) கூற்றுப்படி இறைவன் ஆதியில் விண்ணுலகையும் மண்ணுலகையும்   ஆறு நாள்களில் படைத்தார். தாம் செய்த படைப்பை ஏழாம் நாளில் முடித்திருந்தார்.அந்த ஏழாம் நாளை ஆசீர்வதித்து புனிதப்படுத்தினார். இவ்வாறே ஏழு நாட்கள் கொண்ட வாரம் துவங்கியது! ஆனால் வார நாட்களின்  பெயர்கள் எவ்வாறு தோன்றின என்பதை குறிக்கும் ஆங்கில குறிப்புகள் சிலவற்றை இங்கே காண்போம். 

The Naming of the Days
The Greeks named the days week after the sun, the moon and the five known planets, which were in turn named after the gods Ares, Hermes, Zeus, Aphrodite, and Cronus. The Greeks called the days of the week the Theon hemerai “days of the Gods”. The Romans substituted their equivalent gods for the Greek gods, Mars, Mercury, Jove (Jupiter), Venus, and Saturn. (The two pantheons are very similar.) The Germanic peoples generally substituted roughly similar gods for the Roman gods, Tiu (Twia), Woden, Thor, Freya (Fria), but did not substitute Saturn.
Sunday—Sun’s day
Middle English sone(n)day or sun(nen)day
Old English sunnandæg “day of the sun”
Germanic sunnon-dagaz “day of the sun”
Latin dies solis “day of the sun”
Ancient Greek hemera heli(o)u, “day of the sun”
Monday—Moon’s day
Middle English monday or mone(n)day
Old English mon(an)dæg “day of the moon”
Latin dies lunae “day of the moon”
Ancient Greek hemera selenes “day of the moon”
Tuesday—Tiu’s day
Middle English tiwesday or tewesday
Old English tiwesdæg “Tiw’s (Tiu’s) day”
Latin dies Martis “day of Mars”
Ancient Greek hemera Areos “day of Ares”
Tiu (Twia) is the English/Germanic god of war and the sky. He is identified with the Norse god Tyr. Mars is the Roman god of war. Ares is the Greek god of war.
Wednesday—Woden’s day
Middle English wodnesday, wednesday, or wednesdai
Old English wodnesdæg “Woden’s day”
Latin dies Mercurii “day of Mercury”
Ancient Greek hemera Hermu “day of Hermes”
Woden is the chief Anglo-Saxon/Teutonic god. Woden is the leader of the Wild Hunt. Woden is from wod “violently insane” + -en “headship”. He is identified with the Norse Odin.
Mercury is the Roman god of commerce, travel, theivery, eloquence and science. He is the messenger of the other gods.
Hermes is the Greek god of commerce, invention, cunning, and theft. He is the messenger and herald of the other gods. He serves as patron of travelers and rogues, and as the conductor of the dead to Hades.
Thursday—Thor’s day
Middle English thur(e)sday
Old English thursdæg
Old Norse thorsdagr “Thor’s day”
Old English thunresdæg “thunder’s day”
Latin dies Jovis “day of Jupiter”
Ancient Greek hemera Dios “day of Zeus”.
Thor is the Norse god of thunder. He is represented as riding a chariot drawn by goats and wielding the hammer Miölnir. He is the defender of the Aesir, destined to kill and be killed by the Midgard Serpent.
Jupiter (Jove) is the supreme Roman god and patron of the Roman state. He is noted for creating thunder and lightning. Zeus is Greek god of the heavens and the supreme Greek god.
Friday—Freya’s day

Middle English fridai
Old English frigedæg “Freya’s day”
composed of Frige (genetive singular of Freo) + dæg “day” (most likely)
or composed of Frig “Frigg” + dæg “day” (least likely)
Germanic frije-dagaz “Freya’s (or Frigg’s) day”
Latin dies Veneris “Venus’s day”
Ancient Greek hemera Aphrodites “day of Aphrodite”
Freo is identical with freo, meaning free. It is from the Germanic frijaz meaning “beloved, belonging to the loved ones, not in bondage, free”.
Freya (Fria) is the Teutonic goddess of love, beauty, and fecundity (prolific procreation). She is identified with the Norse god Freya. She is leader of the Valkyries and one of the Vanir. She is confused in Germany with Frigg.
Frigg (Frigga) is the Teutonic goddess of clouds, the sky, and conjugal (married) love. She is identified with Frigg, the Norse goddess of love and the heavens and the wife of Odin. She is one of the Aesir. She is confused in Germany with Freya.
Venus is the Roman goddess of love and beauty. Aphrodite (Cytherea) is the Greek goddess of love and beauty.
Saturday—Saturn’s day
Middle English: Saterday
Old English : sæter(nes)dæg “Saturn’s day”
Latin dies Saturni “day of Saturn”
Ancient Greek hemera Khronu “day of Cronus”
Saturn is the Roman and Italic god of agriculture and the consort of Ops. He is believed to have ruled the earth during an age of happiness and virtue.
Cronus (Kronos, Cronos) is the Greek god (Titan) who ruled the universe until dethroned by his son Zeus.
Sources:
William Morris, editor, The American Heritage Dictionary of the English Language, New College Edition, Houghton Mifflin Company, Boston, 1976.
Webster’s Encyclopedic Unabridged Dictionary of the English Language, Portland House, New York, 1989.

William Matthew O’Neil, Time and the Calendars, Sydney University Press, 1975.

Saturday, July 13, 2013

சந்திர சித்தாந்த கணிதம் -2



சந்திரன் பூமியை முழுமையாகச் சுற்றிவர எடுக்கும் காலம் ஒரு சந்திர மாதம் ஆகும். சந்திர மாதத்தைக் பயன்படுத்தும் முறைகளில் மாதத் தொடக்கம் கொள்வதில் இரண்டு முறைகள் கையாளப்படுகின்றன. ஒரு முறையில் அமாவாசையை மாதத் தொடக்கமாகக் கொண்டு மாதங்கள் பிறக்கின்றன இம்முறைக்கு அமாந்த முறை என்றும் , பூரண சந்திரனை மாதத் தொடக்க மாகக் கொள்வதை பூர்ணிமாந்த முறை என்றும் வழங்கப்படுகிறது.


சந்திரமான முறையில் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் வரும் பூரணை எந்த நட்சத்திரத்தில் வருகிறதோ அந்த நட்சத்திரத்தின் பெயரே அம் மாதத்திற்கு இடப்பட்டது. இதன்படி சித்திரை மாதத்துப் பூரணை சித்திரை நட்சத்திரத்திலும், வைகாசி மாதத்துப் பூரணை விசாக நட்சத்திரத்திலும் வருகின்றன. இவ்வாறே ஏனைய மாதங்களும் அவற்றின் பெயர் கொண்ட நட்சத்திரங்களில் வருவதை அறியலாம். இதனைப் பின்பற்றியே ஒவ்வொரு சந்திரமாதத்துக்கும் அண்மையிலிருக்கும் சூரியமான முறையில் அமைந்த தமிழ் மாதங்களுக்கும் அதே பெயர் இடப்பட்டுள்ளது.

சித்திரை மாதம் என்னும் சைத்ரா மாதம்.
சித்திரை நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். 
வைகாசி மாதம் என்னும் வைசாக மாதம் - 
விசாக நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். 
ஆனி மாதம் என்னும் ஜேஷ்டா மாதம் - 
கேட்டை நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம்..
ஆடி மாதம் என்னும் ஆஷாட மாதம்
அவிட்ட நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற  மாதம். 
ஆவணி மாதம் என்னும் சிரவண மாதம்
திருவோண நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். 
புரட்டாதி மாதம் என்னும் பத்ரபாத மாதம்
உத்திரட்டாதி நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற  மாதம். 
ஐப்பசி மாதம் என்னும் அசுவினி மாதம்
அசுவினி நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். 
கார்த்திகை மாதம் என்னும் கிருத்திகா மாதம்-
கார்த்திகை நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். 
மார்கழி மாதம் என்னும் மார்கசீர மாதம்
மிருகசீரிட நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். 
தை மாதம் என்னும் பௌஷ்ய மாதம் - 
பூச நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். 
 மாசி மாதம்: என்னும் மக மாதம்
மக நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். 
பங்குனி மாதம் என்னும் பல்குணி மாதம்-
பல்குணி  நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். 

Thursday, July 11, 2013

சந்திர சித்தாந்த கணிதம்.



சந்திரனின் ஓட்டத்தைக் கொண்டு கணிக்கும் வர்த்தமானம் சந்திர சித்தாந்த கணிதம் என்று அழைக்கப்படுகிறது.பூமிக்கு மிக நெருக்கமான கிரகம் சந்திரன். மேலும் சந்திரனின் சுற்றுவட்ட பாதை பூமியை மையமாக கொண்டது. சூரியனை பூமி சுற்றுவதால் ஏற்படும் கால வர்த்த மானங்களை முன்னர் கண்டோம். அதுபோல் சந்திரனின் ஓட்டத்தால் ஏற்படும் கால வர்தமானங்களை இனி காண்போம்.

நமது பஞ்சாங்க கணிதத்தில் முக்கிய பங்கு சந்திர சித்தாந்த கணிதத்தை கொண்டே கணிக்கப்படுகிறது. வாரம், திதி, நட்சத்திரம், யோகம் கரணம் ஆகிய பஞ்ச அங்கத்தில் வாரத்தை தவிர்த்து மற்ற நான்கும் சந்திரனின் நிலையை கொண்டே அறியப்படுகிறது.

திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள இடைவெளியை குறிப்பதாகும். சந்திரனின் வட்டப்பாதை முப்பது நாட்களை கொண்டதாகும். பதினான்கு வளர்பிறை காலங்களையும், பதினான்கு தேய்பிறை காலங்களையும், ஒரு பூரண நிலவும் ( பௌர்ணமி ), ஒரு பூரண மறைவும் ( அமாவாசை ) கொண்ட சுற்றாக அது அமைகிறது. சுற்று வட்ட பாதையின் மொத்த அளவான 360' பாகையை  நாள் ஒன்றிற்கு 12 பாகை வீதம் கடக்கின்றது.சூரியனும் சந்திரனும் ஏக பாகையில் உள்ள நிலை அமாவாசை என்றழைக்கப்படுகிறது.அதிலிருந்து வளர்பிறையின் முதல் நாள் கணக்கிடப்படுகிறது.

வளர்பிறை காலம் ( சுக்லபட்சம் )

0  முதல் 12 பாகை வரை பிரதமை திதி ( முதல் நாள் ).
12 முதல் 24 பாகை வரை துவிதியை திதி ( இரண்டாம் நாள் )
24 முதல் 36 பாகை வரை திருதியை திதி ( மூன்றாம் நாள் )
36 முதல் 48 பாகை வரை சதுர்த்தி  திதி ( நான்காம் நாள் )
48 முதல் 60 பாகை வரை பஞ்சமி திதி ( ஐந்தாம் நாள் )
60 முதல் 72 பாகை வரை சஷ்டி திதி ( ஆறாம் நாள் )
72 முதல் 84 பாகை வரை சப்தமி திதி ( ஏழாம் நாள் )
84 முதல் 96 பாகை வரை அஷ்டமி திதி ( எட்டாம் நாள் )
96 முதல் 108 பாகை வரை நவமி திதி ( ஒன்பதாம்  நாள் )
108 முதல் 120 பாகை வரை தசமி திதி ( பத்தாம் நாள் )
120 முதல் 132 பாகை வரை ஏகாதசி திதி ( பதினோராம் நாள் )
132 முதல் 144 பாகை வரை துவாதசி திதி ( பன்னிரெண்டாம் நாள் )
144 முதல் 156 பாகை வரை திரியோதசி திதி ( பதிமூன்றாம் நாள் )
156 முதல் 168 பாகை வரை சதுர்த்தசி திதி ( பதிநான்காம் நாள் )
168 முதல் 180 பாகை வரை பௌர்ணமி  ( பதினைந்தாம் நாள் )
சூரியனுக்கு நேர் எதிர் பாகையில் நிலவு முழுமையாக பிரகாசிக்கும் நாள்.
அதன் பிறகு தேய்மானம் ஒவ்வொரு 12 பாகைக்கும் தொடர்ந்து 15-ந்தாம் நாள் 
ஏக பாகையில் சூரியனும் சந்திரனும் இணைவது அமாவாசையாகும்.

தேய்பிறை காலம் ( கிருஷ்ணபட்சம்,அமரபட்சம் )


180  முதல் 192 பாகை வரை பிரதமை திதி ( முதல் நாள் ).
192 முதல் 202 பாகை வரை துவிதியை திதி ( இரண்டாம் நாள் )
202 முதல் 214 பாகை வரை திருதியை திதி ( மூன்றாம் நாள் )
214 முதல் 226 பாகை வரை சதுர்த்தி  திதி ( நான்காம் நாள் )
226 முதல் 238 பாகை வரை பஞ்சமி திதி ( ஐந்தாம் நாள் )
238 முதல் 250 பாகை வரை சஷ்டி திதி ( ஆறாம் நாள் )
250 முதல் 262 பாகை வரை சப்தமி திதி ( ஏழாம் நாள் )
262 முதல் 274 பாகை வரை அஷ்டமி திதி ( எட்டாம் நாள் )
274 முதல் 286 பாகை வரை நவமி திதி ( ஒன்பதாம்  நாள் )
286 முதல் 298 பாகை வரை தசமி திதி ( பத்தாம் நாள் )
298 முதல் 310 பாகை வரை ஏகாதசி திதி ( பதினோராம் நாள் )
310 முதல் 322 பாகை வரை துவாதசி திதி ( பன்னிரெண்டாம் நாள் )
322 முதல் 336 பாகை வரை திரியோதசி திதி ( பதிமூன்றாம் நாள் )
336 முதல் 348 பாகை வரை சதுர்த்தசி திதி ( பதிநான்காம் நாள் )
348 முதல் 360 பாகை வரை அமாவாசை ( பதினைந்தாம் நாள் )

இவ்வாறாக முப்பது நாள்களை கொண்ட சுற்று சந்திர சித்தாந்த கணிதத்தில் ஒரு மாதம் என்றழைக்கப்படுகிறது. திங்கள் என்பது மாதத்தையும், சந்திரனையும், வாரத்தின் ஒரு நாளையும் குறிகின்றது.இந்த திதிகளே இன்று தேதி என்று மருவி அழைக்கப் படுகின்றது.

Related Posts Plugin for WordPress, Blogger...