சந்திரன் பூமியை முழுமையாகச் சுற்றிவர எடுக்கும் காலம் ஒரு சந்திர மாதம் ஆகும். சந்திர மாதத்தைக் பயன்படுத்தும் முறைகளில் மாதத் தொடக்கம் கொள்வதில் இரண்டு முறைகள் கையாளப்படுகின்றன. ஒரு முறையில் அமாவாசையை மாதத் தொடக்கமாகக் கொண்டு மாதங்கள் பிறக்கின்றன இம்முறைக்கு அமாந்த முறை என்றும் , பூரண சந்திரனை மாதத் தொடக்க மாகக் கொள்வதை பூர்ணிமாந்த முறை என்றும் வழங்கப்படுகிறது.
சந்திரமான முறையில் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் வரும் பூரணை எந்த நட்சத்திரத்தில் வருகிறதோ அந்த நட்சத்திரத்தின் பெயரே அம் மாதத்திற்கு இடப்பட்டது. இதன்படி சித்திரை மாதத்துப் பூரணை சித்திரை நட்சத்திரத்திலும், வைகாசி மாதத்துப் பூரணை விசாக நட்சத்திரத்திலும் வருகின்றன. இவ்வாறே ஏனைய மாதங்களும் அவற்றின் பெயர் கொண்ட நட்சத்திரங்களில் வருவதை அறியலாம். இதனைப் பின்பற்றியே ஒவ்வொரு சந்திரமாதத்துக்கும் அண்மையிலிருக்கும் சூரியமான முறையில் அமைந்த தமிழ் மாதங்களுக்கும் அதே பெயர் இடப்பட்டுள்ளது.
சித்திரை மாதம் என்னும் சைத்ரா மாதம்.
சித்திரை நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம்.
சித்திரை நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம்.
வைகாசி மாதம் என்னும் வைசாக மாதம் -
விசாக நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம்.
விசாக நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம்.
ஆனி மாதம் என்னும் ஜேஷ்டா மாதம் -
கேட்டை நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம்..
கேட்டை நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம்..
ஆடி மாதம் என்னும் ஆஷாட மாதம்-
அவிட்ட நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம்.
அவிட்ட நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம்.
ஆவணி மாதம் என்னும் சிரவண மாதம்-
திருவோண நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம்.
திருவோண நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம்.
புரட்டாதி மாதம் என்னும் பத்ரபாத மாதம்-
உத்திரட்டாதி நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம்.
உத்திரட்டாதி நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம்.
ஐப்பசி மாதம் என்னும் அசுவினி மாதம்-
அசுவினி நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம்.
அசுவினி நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம்.
கார்த்திகை மாதம் என்னும் கிருத்திகா மாதம்-
கார்த்திகை நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம்.
கார்த்திகை நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம்.
மார்கழி மாதம் என்னும் மார்கசீர மாதம்-
மிருகசீரிட நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம்.
மிருகசீரிட நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம்.
தை மாதம் என்னும் பௌஷ்ய மாதம் -
பூச நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம்.
பூச நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம்.
மாசி மாதம்: என்னும் மக மாதம்-
மக நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம்.
மக நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம்.
பங்குனி மாதம் என்னும் பல்குணி மாதம்-
பல்குணி நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம்.
பல்குணி நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம்.
No comments:
Post a Comment