எந்த ஒரு சுப நிகழ்வுகளுக்கும் கசர யோகத்தை விலக்கிய சுபமுகூர்த்த காலத்தை நிச்சயிக்க வேண்டும். கரச யோகமுள்ள தினங்களை கண்டிப்பாக விலக்கியே ஆகவேண்டும்.
அப்படி செய்தால் திருமணத்தில் மணப்பெண்ணிற்கு ஆயுள் குறைவோ அமங்கலமோ ஏற்படும். உபநயனத்தில் பூணுல் இழத்தலும், சீமந்தத்தில் சிசு நாசமும் , யாத்திரையில் தப்பாத மரணத்தையும் தரும். இதற்கு எவ்வித பரிகாரமும் கிடையாது.எனவே கரச யோகத்தை நீக்கியே சுப நிகழ்வுகளை செய்ய வேண்டும்.
கசரம் பார்க்கும் விதம்
முகூர்த்தம் வைக்கும் நாளில் சூரியன் நிற்கும் நட்சத்திலிருந்து சந்திரன் நிற்கும் நட்சத்திரம் வரை எண்ணிவர அந்த தொகை ஒன்பதிற்கு மிகுந்து இருப்பின் ஒன்பதால் வகுக்க மீதம் உள்ள தொகை 3,4,5,9 ஆக கசர யோகம் ஆகும்.
1,2,6,7,8 ஆகியவை மிகுதியாக ஆக வந்தால் கசரமில்லை இது சுபமாகும்.
உதாரணம்
முகூர்த்த நாளன்று சூரியன் அஸ்வினி நட்சத்திரத்தில் உள்ளதாக கொள்வோம். சந்திரன் மகத்தில் இருந்தால் சூரியனினிலிருந்து எண்ண 10வது நட்சத்திரமாக வரும். இதை ஒன்பதால் வகுக்க மீதம் 1 கரசமில்லை. இது சுபமுகூர்த்தம் செய்ய ஏற்ற நாளாகும். மீதம் ஒன்பதிற்கு குறைவாக வரின் வரும் மிதத்தையே எண்ணியாக கொள்ள வேண்டும்.
~ குடும்ப ஜோதிடம்
No comments:
Post a Comment