இன்றைய விஞ்ஞான சாதங்களின் துணைகொண்டு கிரங்களின் ஓட்டங்களை மிக துல்லியமாக கணிக்க முடிகிறது.அதே வேளையில் இச்சாதனங்கள் இன்றி இந்திய வான சாஸ்திரம் மிக துல்லிய அளவைகளை கொண்டதாக இருந்தது உலக வானவியல் ஆராய்ச்சியாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
ஆரியபட்டா (கிபி 476 ~ 550) என்பவர் இந்தியக் கணிதவியலின் செந்நெறிக் காலத்தைச் சேர்ந்த புகழ் பெற்ற கணிதவியலாளரும், இந்திய வானியலாளர் களுள் முதன்மையானவரும் ஆவார். அவருடைய மிகவும் புகழ் பெற்ற பணிகள் ஆர்யபட்டீய (கிபி 499, 23 வயதில்) மற்றும் ஆரிய-சித்தாந்தம் ஆகும்.
இயற்கணிதத்தைச் சார்ந்து முதன் முதலில் உலகில் எழுதப்பட்ட நூல் இந்தியாவில் ஆரியபட்டாவால் 5ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. இது பீஜகணிதம் என்று பெயர்கொண்டது.பாடல் வடிவில் அமைந்துள்ள ஆரியபட்டீயம், கணிதவியல், வானியல் என்பன தொடர்பான கண்டு பிடிப்புக்கள் பலவற்றைக் கொண்டுள்ளது. தொடர்ந்த பல நூற்றாண்டுகளிலும் இந்தியக் கணிதவியலில் இந்நூல் செல்வாக்குச் செலுத்தியது.
மிகச் சுருக்க வடிவில் இருந்த இந்நூலுக்கு, விரிவான உரைகளை இவரது மாணவரான முதலாம் பாஸ்கரரும் தனது சித்தாந்த சிந்தாமணி என்ற நூலில் பீஜகணிதம், கோள்கணிதம், கிரககணிதம், லீலாவதி என்ற நான்கு பிரிவுகளையும் உள்ளடக்கி வெளியிட்டுள்ளார்.;15 ஆம் நூற்றாண்டில், ஆரியபட்டீய பாஷ்யம் என்ற பெயரில் நீலகண்ட சோமயாஜி என்பவரும் எழுதியுள்ளனர். பாஸ்கராவை சிறப்பிக்கும் வகையில் இரண்டாவது செயற்கைகோளிற்கு பாஸ்கரா என்று பெயரிடப்பட்டது.
இவ்விருவரும் ஜோதிட மற்றும் வானசாஸ்திர நிபுணர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment