Wednesday, June 5, 2013

சூரிய சித்தாந்த கணிதம்


காலங்களின் வர்த்தமானங்கள் இரு பகுப்பாக பிரிந்துள்ளது.அவை சூரியனை மையமாக கொண்டு கணிக்கும் வர்த்தமானம் சூரிய சித்தாந்த கணிதம் என்றும்.சந்திரனின் ஓட்டத்தைக் கொண்டு கணிக்கும் வர்த்தமானம் சந்திர சித்தாந்த கணிதம் என்றும் அழைக்கப்பெறும்.

மேஷ ராசி முதல் மீனம் வரை சூரியனின் ஒரு முழு சுற்று ஒரு வருடம் ஆகிறது. நாள் ஒன்றிற்கு ஒரு பாகை வீதம் 360 பாகையை 365.25 நாட்களின் சூரியன் சுற்றிவருகிறது. சித்திரை மாதம் சூரியனின் நுழைவு மேழத்தில் ஏற்படும்போது வருடபிறப்பு கொண்டாடப் படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஒரு பெயரை தாங்கி வருகிறது. இந்த வருடம் விஜய வருடம் என்றழைக்கப் படுகிறது. 

மேலும் சூரிய வட்டப்பாதை இரண்டு அயனங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உத்தராயண புண்ணிய காலமும் ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை தட்சணாயன புண்ணிய காலமும் நடைபெறும். பருவகாலங்கள் ஆறாக பிரிக்கப்பட்டு முறையே ஒவ்வொரு இரண்டு மாதங்களும் ஒரு பருவ காலமாக கணக்கிடப்படுகிறது.

சூரிய சித்தாந்த கணிதப்படி 360  பாகையும் 12 பாகங்களாக பிரிக்கப்பட்டு பன்னிரு ராசி  மண்டலங்களாக அமைகின்றது. பன்னிரு இராசிகளில் சூரியனின் சஞ்சார காலம் பன்னிரு மாதங்களாக பிரிக்கப்பட்டுள்ளது ஒவ்வொரு ராசியும் முறையே 30  பாகை கொண்டது. அந்தந்த இராசிமானத்தில் உள்ள நட்சத்திர அமைப்பே அந்த ராசியின் பெயராக அமைந்துள்ளது. அதுவே மாதத்தின் பெயராகவும் வழங்கப்பெறுகிறது.

பாகை வாரியாக     ராசிகள்       மாதத்தின் பெயர்         அயனங்களின் தொடக்கம் 
0'          to    30'              மேஷம்           மேஷ மாதம் 
30'        to    60'              ரிஷபம்           ரிஷிப மாதம் 
60'        to    90'              மிதுனம்          மிதுன மாதம் 
90'        to   120'             கடகம்            கடக மாதம்                தட்சணாயணம் தொடக்கம் 
120'      to   150'             சிம்மம்           சிங்க மாதம் 
150'      to   180'             கன்னி            கன்னி மாதம் 
180'      to   210'             துலாம்           துலா மாதம் 
210'      to   240'             விருச்சிகம்   விருச்சிக மாதம் 
240'      to   270'             தனுர்               தனுர் மாதம் 
270'      to   300'             மகரம்              மகர சங்கராந்தி        உத்தராயணம் தொடக்கம் 
300'      to   330'             கும்பம்             கும்ப மாதம் 
330'      to   360'             மீனம்                மீன மாதம் 

இவ்வாறாக  சூரியன் பிரதிமாதம் ஒவ்வொரு ராசிமானத்தில் பெயர்ச்சி அடையும் போது அந்த ராசிமானத்தின் பெயரே அந்த மாதத்திற்கு பெயராக அமைகிறது. மேலும் சூரியனை கொண்டே வருடம், அயனம், ருதுக்கள், மாதம், வாரம் மற்றும் நாட்களின் துவக்கம் கணிக்கப்படுகிறது. 

Tuesday, June 4, 2013

பூமியின் சுற்றுவட்டம்.



பூமி சூரியனை மையமாக கொண்டு சுற்றும் காலவர்த்தமானம்.

பூமியின் சுற்றுவட்ட பாதை சுமார் 149.59787 மில்லியன் கிலோமீட்டர். மணிக்கு 108000 கிலோமீட்டர் வேகத்தில் சூரியனை சுற்றுகிறது. 360 டிகிரி வட்ட பாதையை நாள் ஒன்றிற்கு 1 டிகிரி விதம் கடக்கிறது.பூமி சூரியனை சுற்றிவர 365.25 நாட்கள் ஆகும். இது ஓர் ஆண்டு என சூர்ய சித்தாந்தப்படி கணக்கிடப்படுகிறது. 

மேலும் பூமி சூரியனுக்கு வல இட பாகமாக செல்வதை இரண்டு அயனமாக பிரித்தார்கள்.பூமியிலிருந்து பார்வைக்கு சூரியன் வட பாகமாக செல்வதை உத்திராயண புண்ணியகாலம் என்றும் (ஆடி மாதம் முதல் மார்கழி வரை) பின்னர்  தென்பாகமாக செல்வதை தட்சயனாயண புண்ணியகாலம் (தை முதல் ஆனி மாதம் வரை)என்றும் பெயரிட்டனர். பூமியின் சுற்றால்  ஏற்படும் பருவநிலைகளை ஆறுவகையாய் பிரித்தனர்.  





ஓர் ஆண்டை கார்காலம், கூதிர்காலம், ​முன்பனிக்காலம், பின்பனிக்காலம், இளவேனில்காலம், முதுவேனில்காலம் என ஆறு பருவங்களாக பிரித்தனர்.மேலும் இவை பூமியின் ஒவ்வொரு இடங்களிலும் வெவ்வேறு பருவ காலங்கள் அதன் அமைப்பை கொண்டு வேறுபடும்.இந்திய பிரேதேசத்தில் உண்டாகும் பருவநிலைகள்.

கார்காலம்: இது தமிழ் மாதமான ஆவணி, புரட்டாசியை உள்ளடக்கியது.

கூதிர்காலம்: இது தமிழ் மாதமான ஐப்பசி, கார்த்திகையை உள்ளடக்கியது. இலைகள் கூம்பி உதிர்வது கூதிர் எனப்படும்.

முன்பனிக்காலம்: தமிழ் மாதமான மார்கழி, தையை உள்ளடக்கியது.

பின்பனிக்காலம்: இது தமிழ் மாதமான மாசி, பங்குனியை உள்ளடக்கியது.

இளவேனில்காலம்: இது தமிழ் மாதமான சித்திரை, வைகாசியை உள்ளடக்கியது.

முதுவேனில்காலம்: இது தமிழ் மாதமான ஆனி, ஆடி யை உள்ளடக்கியது.

இவை முறையே சமஸ்கிருதத்தில்

1.வசந்த ருது 
2.க்ரிஷ்ம ருது
3.வர்ஷ ருது
4.சரத் ருது
5.ஹேமந்த ருது
6.சிசிர ருது  
என அழைக்கப்படுகிறது. 

ஆக பூமியின் சுற்று வட்டம்
1.ஒரு ஆண்டு எனவும்
2.இரண்டு அயனம் எனவும்
3.ஆறு ருதுக்களாகவும்
4.பன்னிரு மாதங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.

இந்த மாத கணக்கு சூரிய வர்த்தமானம் ,சந்திர வர்த்தமானம் என இருபிரிவுகளை கொண்டது.மேலும் மாத கணக்கு பல்வேறு முறைகளில் எவ்வாறு கணக்கிடபடுகிறது என்பதையும் இனி காண்போம்.






கிரக வர்த்தமானம்.


கிரகங்கள் சூரியனை மையமாக கொண்டு  சுற்றி வரும் காலத்தை கணிக்கும் கால வர்த்தமானம்.

புதன் சூரியனை சுற்றிவர                     88 நாட்கள் ஆகும்.
வெள்ளி சூரியனை சுற்றிவர             225 நாட்கள் ஆகும்.
பூமி சூரியனை சுற்றிவர                      365.25 நாட்கள் ஆகும்.
செவ்வாய் சூரியனை சுற்றிவர         687 நாட்கள் ஆகும்.
வியாழன் சூரியனை சுற்றிவர            12 வருடங்கள் ஆகும்.
சனி சூரியனை சுற்றிவர                       29.5 வருடங்கள்  ஆகும்.
யுரேனஸ் சூரியனை சுற்றிவர           84 வருடங்கள் ஆகும்.
நெப்டியூன் சூரியனை சுற்றிவர       165 வருடங்கள் ஆகும்.

மேற்கண்ட நாட்கள் பூமியின் நாட்களை கொண்டே நாம் அறிவதற்கு சுலபமாக கொடுக்கப்பட்டுள்ளது. ஒருவர் வியாழனில் இருந்து பூமியின் சுழற்சியை கணக்கிடுவதாக இருந்தால் ஒரு வியாழ ஆண்டிற்கு பூமி பன்னிரண்டு முறை சுற்றுவதாக கொள்ள வேண்டும்.அதனதன் இடத்திற்கேற்ப கால கணிதம் வேறுபடும்.

சூரிய வட்டம்.


காலங்கள் எவ்வாறு கணிக்கப்படுகின்றது என்பதை இங்கே இன்னும் சற்று விரிவாக காண்போம்.இந்த வானமண்டலம் கற்பனைக்கு எட்டாத அளப்பரியது. காலங்களை அளப்பதற்கு இங்கே பல மையங்கள் இருக்கின்றன.

1.சூரியன் சுற்றி வரும் பால்வெளியை மையமாக கொண்டு கணிக்கும் கால வர்த்தமானத்தை அறிவியல் ரீதியாக கண்டோம். ஜோதிட சித்தாந்தப்படி சூரிய வட்டம் அறுபது ஆண்டுகள் கொண்டதாக அமைகிறது. அவையாவன 

1.பிரபவ         2.விபவ        3.சுக்கில     4.ப்ரமோதூத     5 ப்ரஜோத்பத்தி  
6.ஆங்கிரஸ     7. ஸ்ரீமுக      8.பவ         9.யுவ           10.தாது 
11.ஈசுவர        12.வெகுதான்ய  13.ப்ரமாதி    14.விக்கிரம      15.விஷு  
16.சித்ரபானு    17.சுபானு      18.தாரண      19.பார்த்திப      20.விய
21.ஸர்வஜித்    22.ஸர்வதாரி  23.விரோதி     24.விக்ருதி      25.கர  
26.நந்தன      27.விஜய       28.ஜய        29.மன்மத       30.துர்முகி 
31.ஹேவிளம்பி 32.விளம்பி     33.விகாரி    34.சார்வரி        35.ப்லவ 
36.சுபகிருது    37.சோபகிருது   38.குரோதி   39.விசுவாவசு     40.பராபவ 
41.ப்லவங்க    42.கீலக        43.சௌமிய  44.சாதாரண       45.விரோதிகிருது 
46.பரிதாபி     47.ப்ரமாதீ      48.ஆனந்த    49.ராக்ஷஸ       50.நள 
51.பிங்கள      52.களயுக்தி    53.சித்தார்த்தி  54.ரௌத்ரி       55.துன்மதி 
56.துந்துபி     57.ருத்ரோத்காரி 58.ரக்தாக்ஷி   59.குரோதன      60.அக்ஷய
ஒரு மனிதன் வாழ்நாளில் ஒரு சூரிய வட்டத்தை கடப்பதை உன்னதமாக வகுத்துள்ளனர் சான்றோர்கள். சஷ்டி ஆப்த பூர்த்தி என்று இதை கொண்டாடுவர். அதற்கு முன் இறக்கும் மனிதனின் மரணம் அகால மரணமாகவே கொள்ளப்படும்.
Related Posts Plugin for WordPress, Blogger...