Wednesday, June 5, 2013

சூரிய சித்தாந்த கணிதம்


காலங்களின் வர்த்தமானங்கள் இரு பகுப்பாக பிரிந்துள்ளது.அவை சூரியனை மையமாக கொண்டு கணிக்கும் வர்த்தமானம் சூரிய சித்தாந்த கணிதம் என்றும்.சந்திரனின் ஓட்டத்தைக் கொண்டு கணிக்கும் வர்த்தமானம் சந்திர சித்தாந்த கணிதம் என்றும் அழைக்கப்பெறும்.

மேஷ ராசி முதல் மீனம் வரை சூரியனின் ஒரு முழு சுற்று ஒரு வருடம் ஆகிறது. நாள் ஒன்றிற்கு ஒரு பாகை வீதம் 360 பாகையை 365.25 நாட்களின் சூரியன் சுற்றிவருகிறது. சித்திரை மாதம் சூரியனின் நுழைவு மேழத்தில் ஏற்படும்போது வருடபிறப்பு கொண்டாடப் படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஒரு பெயரை தாங்கி வருகிறது. இந்த வருடம் விஜய வருடம் என்றழைக்கப் படுகிறது. 

மேலும் சூரிய வட்டப்பாதை இரண்டு அயனங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உத்தராயண புண்ணிய காலமும் ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை தட்சணாயன புண்ணிய காலமும் நடைபெறும். பருவகாலங்கள் ஆறாக பிரிக்கப்பட்டு முறையே ஒவ்வொரு இரண்டு மாதங்களும் ஒரு பருவ காலமாக கணக்கிடப்படுகிறது.

சூரிய சித்தாந்த கணிதப்படி 360  பாகையும் 12 பாகங்களாக பிரிக்கப்பட்டு பன்னிரு ராசி  மண்டலங்களாக அமைகின்றது. பன்னிரு இராசிகளில் சூரியனின் சஞ்சார காலம் பன்னிரு மாதங்களாக பிரிக்கப்பட்டுள்ளது ஒவ்வொரு ராசியும் முறையே 30  பாகை கொண்டது. அந்தந்த இராசிமானத்தில் உள்ள நட்சத்திர அமைப்பே அந்த ராசியின் பெயராக அமைந்துள்ளது. அதுவே மாதத்தின் பெயராகவும் வழங்கப்பெறுகிறது.

பாகை வாரியாக     ராசிகள்       மாதத்தின் பெயர்         அயனங்களின் தொடக்கம் 
0'          to    30'              மேஷம்           மேஷ மாதம் 
30'        to    60'              ரிஷபம்           ரிஷிப மாதம் 
60'        to    90'              மிதுனம்          மிதுன மாதம் 
90'        to   120'             கடகம்            கடக மாதம்                தட்சணாயணம் தொடக்கம் 
120'      to   150'             சிம்மம்           சிங்க மாதம் 
150'      to   180'             கன்னி            கன்னி மாதம் 
180'      to   210'             துலாம்           துலா மாதம் 
210'      to   240'             விருச்சிகம்   விருச்சிக மாதம் 
240'      to   270'             தனுர்               தனுர் மாதம் 
270'      to   300'             மகரம்              மகர சங்கராந்தி        உத்தராயணம் தொடக்கம் 
300'      to   330'             கும்பம்             கும்ப மாதம் 
330'      to   360'             மீனம்                மீன மாதம் 

இவ்வாறாக  சூரியன் பிரதிமாதம் ஒவ்வொரு ராசிமானத்தில் பெயர்ச்சி அடையும் போது அந்த ராசிமானத்தின் பெயரே அந்த மாதத்திற்கு பெயராக அமைகிறது. மேலும் சூரியனை கொண்டே வருடம், அயனம், ருதுக்கள், மாதம், வாரம் மற்றும் நாட்களின் துவக்கம் கணிக்கப்படுகிறது. 

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...