Tuesday, June 4, 2013

பூமியின் சுற்றுவட்டம்.



பூமி சூரியனை மையமாக கொண்டு சுற்றும் காலவர்த்தமானம்.

பூமியின் சுற்றுவட்ட பாதை சுமார் 149.59787 மில்லியன் கிலோமீட்டர். மணிக்கு 108000 கிலோமீட்டர் வேகத்தில் சூரியனை சுற்றுகிறது. 360 டிகிரி வட்ட பாதையை நாள் ஒன்றிற்கு 1 டிகிரி விதம் கடக்கிறது.பூமி சூரியனை சுற்றிவர 365.25 நாட்கள் ஆகும். இது ஓர் ஆண்டு என சூர்ய சித்தாந்தப்படி கணக்கிடப்படுகிறது. 

மேலும் பூமி சூரியனுக்கு வல இட பாகமாக செல்வதை இரண்டு அயனமாக பிரித்தார்கள்.பூமியிலிருந்து பார்வைக்கு சூரியன் வட பாகமாக செல்வதை உத்திராயண புண்ணியகாலம் என்றும் (ஆடி மாதம் முதல் மார்கழி வரை) பின்னர்  தென்பாகமாக செல்வதை தட்சயனாயண புண்ணியகாலம் (தை முதல் ஆனி மாதம் வரை)என்றும் பெயரிட்டனர். பூமியின் சுற்றால்  ஏற்படும் பருவநிலைகளை ஆறுவகையாய் பிரித்தனர்.  





ஓர் ஆண்டை கார்காலம், கூதிர்காலம், ​முன்பனிக்காலம், பின்பனிக்காலம், இளவேனில்காலம், முதுவேனில்காலம் என ஆறு பருவங்களாக பிரித்தனர்.மேலும் இவை பூமியின் ஒவ்வொரு இடங்களிலும் வெவ்வேறு பருவ காலங்கள் அதன் அமைப்பை கொண்டு வேறுபடும்.இந்திய பிரேதேசத்தில் உண்டாகும் பருவநிலைகள்.

கார்காலம்: இது தமிழ் மாதமான ஆவணி, புரட்டாசியை உள்ளடக்கியது.

கூதிர்காலம்: இது தமிழ் மாதமான ஐப்பசி, கார்த்திகையை உள்ளடக்கியது. இலைகள் கூம்பி உதிர்வது கூதிர் எனப்படும்.

முன்பனிக்காலம்: தமிழ் மாதமான மார்கழி, தையை உள்ளடக்கியது.

பின்பனிக்காலம்: இது தமிழ் மாதமான மாசி, பங்குனியை உள்ளடக்கியது.

இளவேனில்காலம்: இது தமிழ் மாதமான சித்திரை, வைகாசியை உள்ளடக்கியது.

முதுவேனில்காலம்: இது தமிழ் மாதமான ஆனி, ஆடி யை உள்ளடக்கியது.

இவை முறையே சமஸ்கிருதத்தில்

1.வசந்த ருது 
2.க்ரிஷ்ம ருது
3.வர்ஷ ருது
4.சரத் ருது
5.ஹேமந்த ருது
6.சிசிர ருது  
என அழைக்கப்படுகிறது. 

ஆக பூமியின் சுற்று வட்டம்
1.ஒரு ஆண்டு எனவும்
2.இரண்டு அயனம் எனவும்
3.ஆறு ருதுக்களாகவும்
4.பன்னிரு மாதங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.

இந்த மாத கணக்கு சூரிய வர்த்தமானம் ,சந்திர வர்த்தமானம் என இருபிரிவுகளை கொண்டது.மேலும் மாத கணக்கு பல்வேறு முறைகளில் எவ்வாறு கணக்கிடபடுகிறது என்பதையும் இனி காண்போம்.






No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...