Thursday, July 11, 2013

சந்திர சித்தாந்த கணிதம்.



சந்திரனின் ஓட்டத்தைக் கொண்டு கணிக்கும் வர்த்தமானம் சந்திர சித்தாந்த கணிதம் என்று அழைக்கப்படுகிறது.பூமிக்கு மிக நெருக்கமான கிரகம் சந்திரன். மேலும் சந்திரனின் சுற்றுவட்ட பாதை பூமியை மையமாக கொண்டது. சூரியனை பூமி சுற்றுவதால் ஏற்படும் கால வர்த்த மானங்களை முன்னர் கண்டோம். அதுபோல் சந்திரனின் ஓட்டத்தால் ஏற்படும் கால வர்தமானங்களை இனி காண்போம்.

நமது பஞ்சாங்க கணிதத்தில் முக்கிய பங்கு சந்திர சித்தாந்த கணிதத்தை கொண்டே கணிக்கப்படுகிறது. வாரம், திதி, நட்சத்திரம், யோகம் கரணம் ஆகிய பஞ்ச அங்கத்தில் வாரத்தை தவிர்த்து மற்ற நான்கும் சந்திரனின் நிலையை கொண்டே அறியப்படுகிறது.

திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள இடைவெளியை குறிப்பதாகும். சந்திரனின் வட்டப்பாதை முப்பது நாட்களை கொண்டதாகும். பதினான்கு வளர்பிறை காலங்களையும், பதினான்கு தேய்பிறை காலங்களையும், ஒரு பூரண நிலவும் ( பௌர்ணமி ), ஒரு பூரண மறைவும் ( அமாவாசை ) கொண்ட சுற்றாக அது அமைகிறது. சுற்று வட்ட பாதையின் மொத்த அளவான 360' பாகையை  நாள் ஒன்றிற்கு 12 பாகை வீதம் கடக்கின்றது.சூரியனும் சந்திரனும் ஏக பாகையில் உள்ள நிலை அமாவாசை என்றழைக்கப்படுகிறது.அதிலிருந்து வளர்பிறையின் முதல் நாள் கணக்கிடப்படுகிறது.

வளர்பிறை காலம் ( சுக்லபட்சம் )

0  முதல் 12 பாகை வரை பிரதமை திதி ( முதல் நாள் ).
12 முதல் 24 பாகை வரை துவிதியை திதி ( இரண்டாம் நாள் )
24 முதல் 36 பாகை வரை திருதியை திதி ( மூன்றாம் நாள் )
36 முதல் 48 பாகை வரை சதுர்த்தி  திதி ( நான்காம் நாள் )
48 முதல் 60 பாகை வரை பஞ்சமி திதி ( ஐந்தாம் நாள் )
60 முதல் 72 பாகை வரை சஷ்டி திதி ( ஆறாம் நாள் )
72 முதல் 84 பாகை வரை சப்தமி திதி ( ஏழாம் நாள் )
84 முதல் 96 பாகை வரை அஷ்டமி திதி ( எட்டாம் நாள் )
96 முதல் 108 பாகை வரை நவமி திதி ( ஒன்பதாம்  நாள் )
108 முதல் 120 பாகை வரை தசமி திதி ( பத்தாம் நாள் )
120 முதல் 132 பாகை வரை ஏகாதசி திதி ( பதினோராம் நாள் )
132 முதல் 144 பாகை வரை துவாதசி திதி ( பன்னிரெண்டாம் நாள் )
144 முதல் 156 பாகை வரை திரியோதசி திதி ( பதிமூன்றாம் நாள் )
156 முதல் 168 பாகை வரை சதுர்த்தசி திதி ( பதிநான்காம் நாள் )
168 முதல் 180 பாகை வரை பௌர்ணமி  ( பதினைந்தாம் நாள் )
சூரியனுக்கு நேர் எதிர் பாகையில் நிலவு முழுமையாக பிரகாசிக்கும் நாள்.
அதன் பிறகு தேய்மானம் ஒவ்வொரு 12 பாகைக்கும் தொடர்ந்து 15-ந்தாம் நாள் 
ஏக பாகையில் சூரியனும் சந்திரனும் இணைவது அமாவாசையாகும்.

தேய்பிறை காலம் ( கிருஷ்ணபட்சம்,அமரபட்சம் )


180  முதல் 192 பாகை வரை பிரதமை திதி ( முதல் நாள் ).
192 முதல் 202 பாகை வரை துவிதியை திதி ( இரண்டாம் நாள் )
202 முதல் 214 பாகை வரை திருதியை திதி ( மூன்றாம் நாள் )
214 முதல் 226 பாகை வரை சதுர்த்தி  திதி ( நான்காம் நாள் )
226 முதல் 238 பாகை வரை பஞ்சமி திதி ( ஐந்தாம் நாள் )
238 முதல் 250 பாகை வரை சஷ்டி திதி ( ஆறாம் நாள் )
250 முதல் 262 பாகை வரை சப்தமி திதி ( ஏழாம் நாள் )
262 முதல் 274 பாகை வரை அஷ்டமி திதி ( எட்டாம் நாள் )
274 முதல் 286 பாகை வரை நவமி திதி ( ஒன்பதாம்  நாள் )
286 முதல் 298 பாகை வரை தசமி திதி ( பத்தாம் நாள் )
298 முதல் 310 பாகை வரை ஏகாதசி திதி ( பதினோராம் நாள் )
310 முதல் 322 பாகை வரை துவாதசி திதி ( பன்னிரெண்டாம் நாள் )
322 முதல் 336 பாகை வரை திரியோதசி திதி ( பதிமூன்றாம் நாள் )
336 முதல் 348 பாகை வரை சதுர்த்தசி திதி ( பதிநான்காம் நாள் )
348 முதல் 360 பாகை வரை அமாவாசை ( பதினைந்தாம் நாள் )

இவ்வாறாக முப்பது நாள்களை கொண்ட சுற்று சந்திர சித்தாந்த கணிதத்தில் ஒரு மாதம் என்றழைக்கப்படுகிறது. திங்கள் என்பது மாதத்தையும், சந்திரனையும், வாரத்தின் ஒரு நாளையும் குறிகின்றது.இந்த திதிகளே இன்று தேதி என்று மருவி அழைக்கப் படுகின்றது.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...