Monday, April 29, 2013

அலகில் சோதியன்!



உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.


இறைவன் அருட்பெரும் ஜோதி வடிவினன்! 
ஜோதி எல்லயற்றதன்மை உடையது. எல்லாவற்றிலும் ஊடுருவி நிற்பது. எல்லாப் பொருளும் காலம் இடம் அளவிற்கு உட்பட்டது. ஆனால் இறைவனோ இம்மூன்றிற்கும் அப்பாற் பட்டவன். எல்லையற்ற தன்மையை எவ்வாறு? எந்த அளவை கொண்டு அறிவது? எல்லையற்ற தன்மையே அதன் உண்மை நிலை என்பதனையே சேக்கிழார் அலகில் சோதியன் என்று குறிப்பிடுகிறார்.

சோதி என்பதற்கு பிரகாசம் என்று பொருள். 
ஒன்றை புலப்படுத்துதல் அல்லது துலங்கச்செய்தல் என்பதே பிரகாசம். தீபம், சூரியன், நட்சத்திரம், சந்திரன், பிராணிகளின் அறிவு இவை அனைத்தும் ஒரு எல்லைக்குட்பட்டு பிரகாசிப்பவை. இவற்றின் பிரகாசத்திற்கு ஆதாரமாக இருப்பதும் அந்த எல்லையற்ற பரம்பொருளே! அடிமுடி காணா ஜோதியனின் திருவடியை சிரமேற்கொண்டு இனி காலச்சக்கரத்தை காண்போம்!

ஆதியாய் நடுவு மாகி அளவிலா அளவும் ஆகிச்
சோதியா யுணர்வு மாகித் தோன்றிய பொருளு மாகிப்
பேதியா ஏக மாகிப் பெண்ணுமாய் ஆணு மாகிப்
போதியா நிற்குந் தில்லைப் பொதுநடம் போற்றி போற்றி.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...