மனிதனின் உடல் மற்றும் மன (எண்ண) அலைகள் சலனப்படுவதற்க்கும் பூமிக்கு அருகில் உள்ள சந்திரனின் ஈர்ப்பு பெரும் பங்கு வகிப்பதை நாம் அறிவோம்! மேலும் இதன் ஈர்ப்பு சடப்பொருள்கள் மீதும் ஆதிக்கம் செலுத்தும். கடல் மற்றும் பாலைவன மணல் ஓதங்களின் மூலம் இதை காணலாம்.
பல்வேறு மிருகம் மற்றும் பறவைகள் கடல்வாழ் உயிரீனங்கள் பல்கி பெருகுவது அமாவசை மற்றும் பௌர்ணமி நாட்களை ஒட்டி அமைந்திருப்பதை கண்டிருப்பீர்கள். மேலும் தாவரங்களும் செடிகொடிகளும் பருவகாலங்களை ஒட்டி பலன் தருவதையும் அறிவீர்கள். பன்னீரண்டு வருடம் சென்று மலரும் குறிஞ்சியும் இந்த கிரங்களின் சலனத்திலிருந்து தப்புவதில்லை! மனிதன் இயற்கையின் மடியிலிருந்து நழுவிவிட்டான். சந்திரனின் இயக்கங்களின் விளைவுகளை பற்றி பின்னர் விரிவாக காண்போம்.
No comments:
Post a Comment