Monday, April 29, 2013

கால பரிமாணம்.



தோன்றும் அனைத்து பொருள்களும் தோன்றி நிலைத்து பின்னர் மறைகின்றன. இம்மூன்றும் ஒரு கால எல்லைக்குள் அடங்குகிறது. இந்த கால எல்லைக்குள் நட்சத்திரம் முதற்கொண்டு புல்பூண்டு வரை அடங்கும். ஆறறிவு முதல் அறிவற்ற சடம் வரை இந்த எல்லைக்கு ட்பட்டதே! தோற்றத்திற்கு உட்படும் அனைத்தும் கால எல்லைக்குள் பிரவேசிக்கின்றன! இந்த கால நிர்ணயம் இடத்திற்கு இடம் மாறுபாடு உடையவை!

காலம் எவ்வாறு உருவாகின்றது? 

அண்டவெளியில் உள்ள ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு பொருளை அல்லது ஒவ்வொரு பொருளால் ஈர்க்கப்பட்டு சுற்றிவருகிறது. ஒரு முறையான வட்டப்பாதையில்  பலகோடி நட்சத்திரங்கள், சூரியன்கள் , கோள்கள், உபகோள்கள் என ஒன்றை ஒன்று சுற்றிவருகிறது. இவற்றின் சுற்றுப்பாதை மற்றும் சுற்றும் வேகத்தை கொண்டு அங்கே காலத்தின் அளவு நிர்ணயக்கப் படுகிறது. 

காலம் இருவகையாக பகுக்கப்பட்டுள்ளது. ஒன்று சுழற்சி மற்றும் சுற்றுதல் குறித்தது. மற்றொன்று நேர்கோணத்தில் செல்லும் வேகத்தை குறித்தது. இவை ஒளியின் வேகத்தில் அளக்கப்படுகிறது. வெற்றிடத்தில் ஒளி வேகம் விநாடிக்கு 299,792,458 மீட்டர்களாகும்.


ஓர் ஒளி ஆண்டு 3 x 108 x 365 x 24 x 60 x 60 விடை என்ன தெரியுமா? 7.46 மில்லியன் (ஒரு மில்லியன் = 10 லட்சம்) கிலோ மீட்டர் (5.88 மில்லியன் மைல்கள்). இவ்வளவு வேகமாகப் பயணம் செய்யும் ஒளியே, நாம் வாழும் புவியும் சூரியனும் இடம் பெற்றுள்ள பால்வெளி என்கிற விண்மீன் திரளை கடக்க பல ஆயிரம் ஆண்டுகள் பயணம் செய்யவேண்டும். பால் வெளியின் தூரம் சுமார் 1,00,000 ஒளி ஆண்டுகள் ஆகும்.

பால்வெளி மையத்திலிருந்து  சூரியனின் வட்டப்பாதை 30000 ஒளியாண்டுகள் தள்ளி அமைந்திருகிறது.சூரியன் ஒரு நொடிக்கு 220km வேகத்தில் பயணிக்கிறது. சப்தரிஷி மண்டலம் என்றழைக்கப்படும் பால்வெளியை சுற்றிவர 250மில்லியன் ஆண்டுகள் ஆகும். (ஆதாரம்:Morris, Mark. "The Milky Way." The World Book Encyclopedia, 2002, Vol. 13: 551.), 

சூரியனின் சுற்றுவட்டம் 1 காஸ்மிக் வருடம் என்று அழைக்கப்படுகிறது .சூரியன் தன வயதான 500 பில்லியனில் இதுவரை 20 முறை இந்த பால்வெளியை வலம் வந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...