Monday, April 29, 2013

பிரபஞ்ச பொருட்களின் தொடர்பும் சார்புநிலையும்!



வானவியலும் ஜோதிடமும்! 

கோடிக்கணக்கான நட்சத்திரங்களை உள்ளடக்கிய எண்ணற்ற பிரபஞ்சங்கள் இந்த பேரண்டத்தில் உள்ளது. இதை போன்ற பேரண்டங்களும் கோடிக்கணக்கானவை. ஆனாலும் இவை அனைத்தும் ஒன்றிற்கு ஒன்று தொடர்புடையது மற்றும் சார்புடையது என்பது மறுக்கமுடியாத அறிவியல் உண்மை. சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள் அனைத்தும் சூரியனையே ஆதாரமாக கொண்டவை. சூரியன் இல்லை என்றால் இவை இல்லை- ஏன் நாமும் இருக்க வாய்ப்பில்லை.



இந்த சூரியனும் பால்வெளியை மையமாக கொண்டே சுற்றி வருகிறது.வானில் எங்கோ இருக்கும் நட்சத்திரமும் பூமியில் எங்கோ ஒரு புள்ளியில் இருக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் தொடர்புண்டு (Theory of Relativity and Connection) என்று இன்றைய விஞ்ஞானம் இப்பொழுதுதான் நிருபித்து இருக்கிறது! 

சோதியை இடமாகக் கொண்ட நட்சத்திரமும், சூரியனும், உயிரினங்களும் உயிரற்ற ஜடப்பொருட்களும் அனைத்தும் இணக்கமான தொடர்புடையவை என்பதை தனது மேலான அறிவின் (மெய்யுணர்வு) மூலம் கண்டறிந்தனர் ஆன்றோர்கள். 

அண்டவெளியில் பெரிய பொருள்கள் சிறிய பொருள்களை கவரும். மேலும் தன அருகே உள்ள பொருள்களின் காந்த அலைகளை கவரும் தன்மை உள்ளதாக இருக்கும். இவற்றின் விவரங்களை வரும் பதிவுகளில் காணலாம்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...